Local business web pages from Sri Lanka Search result

Fundraising for Badhriyyah Jumma Masjid - Kattankudy

Fundraising for Badhriyyah Jumma Masjid - Kattankudy

சுவனத்தில் வீடளிக்கும் இறை வீட்டைக் கட்டுவோம் قال النبي صلى الله عليه وسلم : ( مَنْ بَنَى مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ ) رواه البخاري (450) ومسلم (533) من حديث عثمان رضي الله عنه . எவர் ஒரு பள்ளிவாயலைக் கட்டினாரோ அல்லாஹ் அவருக்காக சுவர்க்கத்திலே அதைப்போன்று கட்டுகின்றான் என நபீ ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்) பேரன்புக்குரிய இஸ்லாமிய உள்ளங்களே! இறை அன்பை உள்ளத்தில் உட்கொண்ட ஈமானிய இதயங்களே!! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு. எம்மைப் படைத்து பரிபாலித்து அன்றாடம் எமக்குத் தேவையானவற்றைத் தந்து, பாதுகாத்து வளர்க்கின்ற அல்லாஹ் எங்களுக்குச் செய்கின்ற அருள்கள் ஏராளம். அதிகாலை கண்விழித்து முதல் இரவு துயில்கொள்ளும் வரை அவன் செய்யும் நிஃமத்துக்கள் தாராளம். நாம் நினைத்துப் பார்க்காமல் இருந்தும் நன்றி செலுத்தாமல் இருந்தும் எமக்காக வல்ல அல்லாஹ் பேரருளை சொரிந்து கொண்டே இருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ். அந்த அளவற்ற அருளாளனுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்து விட்டோம். அவன் எங்கள் மீது அன்பு வைக்க என்ன நல்ல காரியம் செய்திருக்கின்றோம். கடமைகளையே நாங்கள் செய்யத்தவறியர்களாக இருக்கின்றோம். அந்த வல்ல நாயனுக்கு மிக உகப்பான காரியம், இவ்வுலகில் அவனுக்காக ஒரு பள்ளிவாயலைக் கட்டுவதாகும். இறைவனுக்காக ஒரு பள்ளிவாயலை பூரணமாக கட்டிக்கொடுக்க எம் எல்லோராலும் முடியாது. காரணம் போதிய பணவசதி எங்களிடம் இல்லை. ஆனால் ஒரு பள்ளிவாயலைக் கட்டுவதற்கு எம்மால் முடிந்த பண உதவுயை செய்து நன்மையில் பங்கு கொள்ள எம் ஒவ்வொருவராலும் முடியும். அதில் சந்தேகமில்லை. நாங்கள் செய்யக்கூடிய நல்ல காரயங்களில் மிகச் சிறந்த நல்ல காரியம் இறைவனுக்காக ஒரு பள்ளிவாயலைக் கட்டுவது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அந்த வகையில் மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஏழைகள் சூழ வாழக்கூடிய ஒரு பள்ளிவாயல் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலாகும். இப்பள்ளிவாயலைச் சூழ சுமார் 5000 பேர் உள்ளனர். இதனால் இச்சிறிய பள்ளிவாயலை மிகப்பெரிய இறையில்லமாகக் கட்ட முயற்சி எடுத்து 3மாடிகள் கொண்ட பள்ளிவாயிலாக இன்று கட்டப்பட்டுக்கொண்டு வருகின்றது. நிறைவுசெய்ய இன்னும் பல இலட்ச ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இறை அன்பு கொண்ட, இஸ்லாமிய உணர்வு கொண்ட நெஞ்சங்கள் இப்பள்ளிவாயல் கட்டிடப் பணிக்காக தங்களால் முடிந்த சிறிய பண உதவியாயினும் பெரிய உதவியாயினும் தயங்காமல் செய்யுங்கள். இறைவனது பேரன்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். “வல்ல அல்லாஹ் அனைவருக்கும் இப்பணிக்காக சுவனத்தில் ஒரு மாளிகையை அமைத்துத் தருவானாக! ஆமீன்!!” பணம் அனுப்பும் வங்கி முகவரி: BADHRIYYAH JUMAH MOSQUE A/C No: 065100120000937 PEOPES BANK KATTANKUDY.