Local business web pages from Sri Lanka Search result

Siva Filling and Service Station

Siva Filling and Service Station

A9 Road,Nunavil, Chavakachcheri ,
Siva Filling station,Service station,Restaurant and supermarket
J/ Chavakachcheri Hindu College

J/ Chavakachcheri Hindu College

1904 சாவகச்சேரி சந்தைக்கண்மையில் ஒரு சைவத்தமிழ்க் கலவன் பாடசாலையாக திரு.வி.தாமோதரம்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்படல். 1905 அது சங்கத்தானைக்கு மாற்றப்படல் முதற்றலைமை ஆசிரியர் திரு.கே.எஸ்.கந்தசாமி. 1907 துவிபாஷா பாடசாலையாதல். 1907-1910 அரசினர் நன்கொடையின்றி இருந்த காலம். 1908 தமிழ்ப் பாடசாலை சங்கத்தானை கந்தசாமி கோயிலின் பின் வீதிக்கு கொண்டு செல்லப்படல். 1921 (அரசினர் நன்கொடையுடன்) ஆங்கிலப்பாடசாலை திரு.வி.தாமோதரம்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்படல். 1922 யாழ்ப்பாணம் இந்துச் சபையினரிடம் ஆங்கிலப் பாடசாலை ஒப்படைக்கப்படல். அரசினர் நன்கொடை பெறுதல். E.S.L.C வகுப்பு வைத்தல். 1926 கோவிலடித் தமிழ்ப் பாடசாலை இங்கு கொண்டுவரப்படல். 1934 C பிரிவுக் கல்லூரியாதல், S.S.C வகுப்பு ஆரம்பம். 1937 தமிழ்ப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபையினரிடம் ஒப்படைக்கப்படல். 1943 விளையாட்டு இல்லங்கள் அமைத்தல். 1945 "B" பிரிவுக் கல்லூரியாதல். S.S.R வகுப்பிற்கு விஞ்ஞானக் கல்வி போதிக்கப்படல். 1949 "A" பிரிவுக் கல்லூரியாதல். H.S.C வகுப்பு ஆரம்பம். 1954 முதன்முதலாக விஞ்ஞானத் துறை மாணவர்கள் இருவர் பல்கலைக் கழகம் புகுந்தனர். 1957 பழைய மாணவர் சங்கம் அமைத்தல். தமிழ்ப் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையுடன் இணைக்கப்படல். 1962 (1962-06-15) அரசாங்கம் பொறுப்பேற்றல். 1970 கலைத்துறையில் பயின்ற 17 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதி பெற்றனர். 1973 முதன் முதலாக பராசக்த்தி என்ற மாணவி பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்றார். 1979 தேர்தல் தொகுதிக்கு ஒன்று எனும் அரசின் புதிய கொள்கைக்கு அமைய இப்பள்ளி மத்திய மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. 1989 (29.08.1989) இலிருந்து இந்து ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பப் பிரிவு தனித்து இயங்கத் தொடங்கியது. அவ்வேளை 6-13 வரையான வகுப்புக்களுடன் இந்துக் கல்லூரி தொடர்ந்து இயங்கியது. 1993 (05.02.1993) இல் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1993 முதனமுதலாக சோமசுந்தரம் சரத்ஜெயன் என்ற மாணவன் கா.பொ.த (உ/த) இல் நான்கு பாடத்திலும் அதிவிசேட சித்தி பெற்றார். 1994 நான்கு மாணவர்கள் நான்கு பாடத்திலும் அதிவிசேட சித்தி பெற்றனர். 1996 முதன்முதலாக மருத்துவபீடத்திற்கு யாழ் மாவட்டத்தில் முதலிடம். 1999 6 மாணவர்கள் 4A சித்தி பெற்றனர். கணிதத் துறையில் த. தர்மினி தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் பெற்றார். 2000 மே மாதம் போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து வடமராட்சியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் வலிகாமத்தில் இணுவில் மத்திய கல்லூரியிலும் இரு பிரிவுகளாக இயங்கியது. நவம்பர் மாதம் அதிபர் தலைமையிலான குழு ஒன்று பாதுகாப்புப் படையின் அனுமதியுடன் கல்லூரிக்குச் சென்று முக்கிய ஆவணங்களை மீட்டு வந்தது. 2001 இரண்டாவது தடவையாக நூலக உபகரணங்கள் சிலவற்றை மீட்டு வந்தது. மூன்றாவது தடவையாக தளபாடங்களில் ஒரு பகுதி மீட்டு வரப்பட்டது. கணித பீடத்திற்கு யாழ் மாவட்டத்தில் முதலிடம். 2002 பெப்ரவரி 18 ஆம் திகதி நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் இயங்கிய பிரிவுடன் மீண்டும் சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியது. மே மாதம் தொடக்கம் இரு பிரிவுகளும் சொந்த இடத்தில் இயங்கியது. 2004 நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கல்லூரி ஞாபகார்த்த முத்திரை வெளியீடு 30.01.2004 அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து கல்விக் கண்காட்சி, விளையாட்டுப் பெருவிழா போன்றவற்றுடன் நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. 2006 கல்லூரிப் பூங்கா அமைக்கப்பட்டது. 2007 சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அனுசரணையுடன் உள்ளக ஒலி அமைப்பு மேற்கொள்ளப்பட்டது. 2008 காலாண்டு செய்தி மடலொன்று ”தடம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டு தொடர்ந்து வெளிவருகின்றது.
Tel: 212270350